மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை

Author: Udhayakumar Raman
26 June 2021, 6:56 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருவர் தூக்குப் போட்டு இறந்த சம்பவம் ஆட்சியர் வளாகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் யாரோ ஒரு நபர் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டு கொண்டிருப்பதாக சூலக்கரை காவல் நிலையத்திற்கு வந்த தகவல் கிடைத்து. இதையடுத்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் மாவட்ட ஆட்சியர் வளாகம் வாசல் அருகே உள்ள மரத்தில் பார்த்தபோது 32 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே சூலக்கரை போலீசார் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அவர் உடலை அப்புறப்படுத்தினார்கள். அவரது சட்டைப்பையில் இருந்த விவரங்களை சேகரித்த போது அவருடைய ஆதார் கார்டு கிடைத்தது. ஆதார் கார்டில் உள்ள அவர் பெயர் மற்றும் விவரங்களை சேகரித்தனர். அவர் சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து சூலக்கரை போலீசார் சிவகாசி காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்படி தூக்கு போட்டு இறந்த நபருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்று தெரியவந்தது . உடனே சூலக்கரை போலீசார் இறந்து போன அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருவர் தூக்குப் போட்டு இறந்த சம்பவம் ஆட்சியர் வளாகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 181

0

0