கொரோனாவில் இருந்து குணமடைந்த காவல் கண்காணிப்பாளர் : பணிக்கு திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு!

30 September 2020, 1:05 pm
Corona Cure Police- updatenews360
Quick Share

கோவை : கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று அலுவலகம் திரும்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு-வை கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருளரசு பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தானாக முன்வந்து கடந்த 13ம் தேதி கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் இவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் தற்போது பூரண குணமண்டைந்துள்ளார். தொடர்ந்து இன்று பணிக்கு திரும்பிய அவருக்கு கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அனிதா, விஜய கார்த்திக்ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்டோர் மாவட்ட கண்காணிப்பாளர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.