அரசியலில் ஒதுங்குவதாக அறிவித்த சசிகலாவுக்கு ஆதரவு : கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

2 July 2021, 11:22 am
Sasikala Poster- Updatenews360
Quick Share

கோவை : அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள சசிகலாவுக்கு ஆதரவாக கோவையில் திடீரென பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா கடந்த சில மாதங்களாக அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். அவர் நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ அவ்வப்போது ரிலீஸாகி அதிமுக.,வில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு அதிமுக.,வின் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அமுமுக மற்றும் அதிமுக.,வின் மற்றொரு அணியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவின் நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்ட அதிமுக.,வினர் தீர்மானமே நிறைவேற்றும் அளவுக்கு அவரது பேச்சுக்கள் அதிமுக., வட்டாரத்தில் சலசலப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பல பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.இந்த சூழலில், கோவையின் பல இடங்களில் திடீரென சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

எம்ஜிஆரே என்னிடம் கருத்து கேட்பார் என நேற்று சசிகலா பேசியதாக ஆடியோ வெளியா நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வரும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “கட்டளையிடுங்கள் சின்னம்மா.. காத்திருக்கிறோம். துரோகத்தை வெல்வோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சசிகலா அரசியலுக்கு வருவார் , திருப்பம் ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் நழுவி விடவே தற்போது மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

Views: - 107

0

0