மருதமலையில் பக்தர்களின்றி நடந்த சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்வை வெளியிட்ட நிர்வாகம்!!

20 November 2020, 7:55 pm
Maruthamalai - Updatenews360
Quick Share

கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஏழாம் படை வீடு என்று அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை அன்று வேள்வி மாதத்துடன் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினர்.

தொடர்ந்து ஆறாவது நாளான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்வானது மருதமலை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் , வீரபாகு வெள்ளை குதிரை வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

முன்னதாக ஒரு மணியளவில் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இன்று அதிகாலை முதல் மூகூர்த்த நாள் என்பதால் ஏரானமாவரகள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இருப்பினும் கொரானா எதிரொலி மற்றும் அரசு உத்தரவு படி சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி நிறைவடைந்தது.

நாளை நடைப்பெற உள்ள திருக்கல்யாணம் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 33

0

0