பாலாவின் படம் முற்றிலுமாக கைவிடபட்டதா.? ரோலக்ஸால் எகிரிய மார்க்கெட்டால் சூர்யா அதிரடி முடிவு..!

Author: Rajesh
9 June 2022, 12:27 pm
Quick Share

சூர்யா, ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்ட கதையாக இயக்குனர் பாலா, இயக்கி வருகிறார். மேலும் அப்பா,மகன் சூர்யா எனவும் இருவேட கதாபாத்திரம் எனவும் படப்பிடிப்பு ஆரம்பித்திருந்தது.

நடிகர் சூர்யாவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நந்தா. பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் முக்கியமான படங்களாக பார்க்கப்படும். இத்திரைப்படத்தை இயக்கிய பாலா தற்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்த போது அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சமீபத்தில் சூர்யாவிற்கும், பாலாவிற்கும் படப்பிடிப்பின்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், சூர்யா கோபப்பட்டு கிளம்பினார் என்ற தகவல் வேகமாக பரவியது. இதனிடையே தயாரிப்பு நிறுவனம், நடிகர் சூர்யா ஆகியோர் அவர்களது ட்டுவிட்டர் பக்கத்தில் விரைவில் படப்பிப்பு துவங்கப்படும் அறிவித்து இருந்தனர். இருந்த போதிலும், தற்போது, சூர்யா முழுவதுமாக சமாதானமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சமீப காலமாக வந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியடைந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சூர்யாவிற்கு பாலாவின் திரைப்படம் அவ்வளவு முக்கியமாக பார்க்கப்படவில்லை. மேலும் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக ரோல்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததையடுத்து அவரது மார்கெட் பல மடங்கு எகிறியுள்ளது.

இதனிடையே பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க போவதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்து வந்த, நிலையில் சூர்யாவிற்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது சூர்யா 41 திரைப்படம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி இருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Views: - 687

0

0