லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி: பஸ் ஸ்டாண்டில் கூடவா? சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை….!!
Author: Sudha16 ஆகஸ்ட் 2024, 2:48 மணி
அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுவது அதிகரித்து கொண்டேயிருக்கிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி ராமசாமி.இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளதால், இந்த நிலத்தை முறையாக அளந்து எல்லையை நிர்ணயம் செய்து கொடுக்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.
இதுகுறித்து பேரையூர் தாலுகா, குறுவட்ட சர்வேயர் ஜோதி என்பவரையும் சந்தித்து, தன்னுடைய தனது இடத்தை சர்வே செய்து கொடுக்க வேண்டும் என்று ராமசாமி கேட்டுள்ளார்.ஆனால்,ஜோதியோ, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் அலைக்கழித்து வந்திருக்கிறார்.
கடந்த 6ம் தேதி, ராமசாமியின் நிலத்தை அளந்துள்ளார்.ஆனாலும், அதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமானால் லஞ்சம் கேட்டுள்ளார்.தன்னுடைய சொந்த நிலத்திற்கு ஏன் லஞ்சம் தர வேண்டும் என்று ஆதங்கப்பட்டுள்ளார் விவசாயி ராமசாமி.அதனால் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் திட்டத்தின்படி, பேரையூர் பஸ் ஸ்டாண்டில், சர்வேயர் ஜோதியிடம் ரூ.2 ஆயிரத்தை ராமசாமி கொடுத்தார். அப்போது, அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி-யான சத்யசீலன் தலைமையிலான போலீஸார், ஜோதியை கையும், களவுமாக பிடித்தனர்.
தொடர் விசாரணைக்குப் பிறகு சர்வேயர் ஜோதி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். பெண் அதிகாரி இப்படி பகிரங்கமாக கைது செய்யப்பட்டது, மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0
0