திடீர் திருமணத்தை முடித்த பிகில் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து ..! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

Author: Vignesh
29 September 2022, 9:32 am
Quick Share

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்தவகையில் விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்த படம் பிகில். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தது.

மாடல் அழகியான காயத்ரி ரெட்டி பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தவர். காயத்ரி ரெட்டி தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெட்டி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதல் படமே தளபதி விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டுள்ளது.

பிகில் படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார் காயத்ரி. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பைனல் வரை வரவில்லை என்றாலும் மிகவும் டஃப்பான போட்டியாளராக வலம் வந்தார் காயத்ரி. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி நிச்சயதார்தம் நடைபெற்று இருந்ததாக திடீர் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் காயத்ரி.

இப்படி ஒரு நிலையில் இவருக்கு சமீபத்தில் திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காயத்ரி.

Views: - 317

0

0