நீட் தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடு சூர்யாவின் அறிக்கை : நீதிபதி சுதந்திரம் கருத்து..!

14 September 2020, 11:54 am
Quick Share

நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளிட்ட நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

நேற்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்தும் மாணவர்களின் தற்கொலை குறித்தும் கருத்து தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது.

” என்று குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாகவே சூர்யாவின் அறிக்கை உள்ளது என நீதிபதி சுதந்திரம் கூறியுள்ளார்.

Views: - 11

0

0