திரையரங்குகள் திறப்பு குறித்து நாளை இனிப்பான செய்தி : அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு!!

31 October 2020, 5:12 pm
Theatre - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திரையரங்குகள் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் மழைநீர் புகுந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இந்நிலையில் தினசரி சந்தையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆய்வு மேற்க்கொண்டார். மழைநீர் தேங்கமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகர்களிடம் உறுதியளித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் திரையரங்குகள் திறப்பது பற்றி கடந்த 28ந்தேதி தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் மருத்துவக்குழு கண்காணிப்பு கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையும் முதல்வர் பெற்றுள்ளார்..ஆய்வு செய்து வருவதாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு (திரையரங்கு திறப்பு) நாளை வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்.

கோவில்பட்டி நகரில் ஓடைக்கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் தினசரி சந்தைக்குள்ள சென்றுள்ளது. வருங்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லமால் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், இந்த வழக்கினை வாபஸ் பெற இந்து அறநிலையத்துறையினர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்றும், அதன் பின்னர் ஆக்கிரமிப்புகள் போர்கால அடிப்படையில் அகற்றப்படும் என்றும், அதன் பின்னர் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு இல்லை என்றும், நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்

Views: - 12

0

0