தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்: இன்று பதவியேற்கிறார்..!!

Author: Aarthi Sivakumar
30 June 2021, 8:55 am
Quick Share

சென்னை: தமிழக டி.ஜி.பி. திரிபாதி இன்று ஓய்வு பெறும் நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. அவர் இன்று ஓய்வு பெறுகிறார். புதிய டி.ஜி.பி.
அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.

சைலேந்திர பாபுவின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். தலைசிறந்த தொழில் முறையிலான அதிகாரி ஆவார். சட்டம்-ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும் சரி, போலீஸ், பொதுமக்கள் நலத்தை பேணுவதிலும் சரி அவருக்கு, நிகர் அவரே. நல்ல பேச்சாளர். இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி. போதிய அதிகாரம் இல்லாத பதவியில் அவர் நியமிக்கப்பட்ட போதும், அவர் துவண்டு போகாமல் அதில் கூட சாதித்து காட்டி உள்ளார். தற்போது அவர் ரயில்வே டி.ஜி.பி.யாக பதவியில் உள்ளார்.

இன்று பகல் 12 மணி அளவில் சைலேந்திரபாபு தமிழகத்தின் 30வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, திரிபாதி விடைபெறுகிறார். இன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரிபாதிக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

Views: - 206

0

0