மருத்துவர் காந்தராஜ் மீது தமிழ் நடிகைகள் பரபரப்பு புகார் : நிருபர்கள் கேட்ட கேள்வி… மழுப்பிய ஆர்கே செல்வமணி!

Author: Udayachandran RadhaKrishnan
13 செப்டம்பர் 2024, 4:46 மணி
RK
Quick Share

சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடங்கினர்.

கண்காட்சியானது விநாயகர் சதிர்த்தி அன்று 7ந்தேதி முதல் துவங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளது

இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன,

இந்த காண்காட்சியை நடிகை ரோஜாவின் கணவரான இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பார்வையிட்டார்,விநாயகர் சிலைகள் சிறப்பு குறித்து அதன் அமைப்பாளர் சீனிவாசன் விளக்கினார்,

பின்பு பேட்டியளித்த ஆர்.கே செல்வமணி, உலகில் உள்ள அனைத்து கடவுளாக விநாயகர் எப்படி இருப்பார் என்பதை ஒரே இடத்தில் பார்ப்பது ஆச்சிரயமாக உள்ளது.

எனக்கு 60 வயது ஆகப்போகிறது 60 வருடத்தில் இது போன்ற கண்காட்சியை நான் பார்த்ததில்லை, ஒரு இயக்குனராக என்னால் 10 சதவிகிதம் கூட யோசிக்காத அளவிற்க்கு விநாயகர் சிலை கண்காட்சி அமைத்த சீனிவாசனுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றியை தெரிவித்தார்.

மேலும் படிக்க: அம்மா தாயே ஓட்டு போடுங்கன்னு வீதி வீதியா வரும் போது ஆப்பு வைப்பான்… பங்கம் செய்த பிரபலம்.!!

தமிழகத்தில் உள்ள நடிகைகள் குறித்து டாக்டர் காந்திராஜ் மீது நடிகை ரோகினி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கபட்டதை கேட்டபோது, நான் விநாயகர் கண்காட்சி வந்ததை விட்டுவிட்டு காந்திராஜ் குறித்து நான் பேசியதை மட்டும் ஒளிபரப்புவீர்கள்.

இது வரை 1000 விமர்சனங்கள் மருத்துவர் காந்திராஜ் குறித்து வந்துள்ளது நான் விநாயகர் சிலை கண்காட்சிக்கு குறித்து தான் பேசமுடியும் என்று நைசாக கூறிவிட்டு நழுவி சென்றார்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 243

    0

    0