21 பேர் கைது..! காவல்துறை அதிரடி நடவடிக்கை..! தமிழகத்தை உலுக்கிய விபச்சார நெட்வொர்க்..!

21 August 2020, 12:33 pm
Hand_Cup_Updatenews360
Quick Share

விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கும்பல்களை முடக்கும் விதமாக, தமிழக காவல்துறை மேற்கொண்ட இரு தனி நடவடிக்கைகளில், தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இயங்கும் இரண்டு விபச்சார மோசடிகளை முறியடித்து 21 குற்றவாளிகளை கைது செய்து 10 பெண்களை மீட்டுள்ளது.

தஞ்சாவூர் :
தஞ்சாவூரில், காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு, விபச்சார மோசடியின் செயல்பாட்டைப் பற்றிய ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, துணை ஆய்வாளர்கள் தென்னரசு, சந்திரசேகர் மற்றும் கீர்த்திவாசன் தலைமையில் நகரத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்த மூன்று சிறப்பு குழுக்களை நியமித்தார்.

மசாஜ் பார்லர்கள் மற்றும் நிறுவனங்களின் மூலம் விபச்சார மோசடி நடத்தப்படும் ஏழு வீடுகள் அடையாளம் கண்டன. ஏழு வீடுகளில், மூன்று மசாஜ் பார்லர்களாகவும், மீதமுள்ள நான்கு வீடுகள் போலி நிறுவனங்களாகவும் செயல்பட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த சோதனையின் மூலம் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த 9 பெண்கள் மீட்கப்பட்டனர். போலீசார் மொத்தம் 19 நபர்களைக் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், மீட்கப்பட்ட பெண்கள் நகரத்தில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

கோவை :
கோயம்புத்தூரில், கிராமப்புற போலீசார் புதன்கிழமை இரவு மேட்டுப்பாளையம் அருகே ஒரு வாடகை லாட்ஜுக்குள் இயங்கி வந்த ஒரு விபச்சார மோசடியைக் கண்டுபிடித்தனர். லாட்ஜில் இருந்து விபச்சாரத்தை நடத்திய இருவரை போலீசார் கைது செய்து கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது பெண்ணை மீட்டனர். பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணேசன் மற்றும் மகேந்திரன் கைது செய்யப்பட்டனர்.

“கொரோனா ஊரடங்கு தங்கள் வணிகத்தை மிகவும் மோசமாக பாதித்த பின்னர் அவர்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். மகேந்திரன் ஒரு மாத வாடகை ரூ 50,000 செலுத்த வேண்டியிருந்தது. மார்ச் மாதத்திலிருந்து அவரால் வாடகை செலுத்த முடியவில்லை.” என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் போலீசார் ஆஜர்படுத்திய பின்னர், அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையில், மீட்கப்பட்ட பெண்ணை சங்கனூர் சாலையில் உள்ள அரசு காப்பகம் ஒன்றுக்கு போலீசார் அனுப்பினர்.

Views: - 33

0

0