6 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்..!

13 September 2020, 10:08 am
Quick Share

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் இதன் காரணமாக வடதமிழகத்தையொட்டி உள்ள மாவட்டங்கள் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளது. நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Views: - 9

0

0