புதுச்சேரியை போல மரத்தடிக்கு மாறுகிறதா தமிழக சட்டப்பேரவை..? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

7 August 2020, 1:25 pm
TN Assembly- updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை மாற்று இடத்தில் நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.

தமிழக சட்டப்பேரவையின் விதிகள்படி 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கையும், மே, ஜூன் மாதங்களில் மானிய கோரிக்கை விவாதமும் நடத்தப்படும். இந்த ஆண்டு மானிய கோரிக்கை விவாதம் மார்ச் 9ஆம் தேதி ஆரம்பித்து ஏப். 9 ஆம் தேதி வரை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ம் தேதிக்குள், கூட்டத்தொடர் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

தற்போது, கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தலையோங்கியுள்ளதால், அதற்கு தீர்வு காண குளிர்கால கூட்டத்தொடர் கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் இடைவெளி கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், குளிர்கால கூட்டத்தொடரை மாற்று இடத்தில் வைத்து நடத்துவது குறித்து, சட்டப்பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்முறையாக, மரத்தடியில் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0