தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து? ஒய்-பிளஸ் பாதுகாப்பு!!

4 February 2021, 3:26 pm
Bjp Annamalai - Updatenews360
Quick Share

தமிழக பாஜக துணைத்தலைர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்துள்ளதால் அவருக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கர்நாடகத்தில் பணிபுரிந்து வந்தார்.கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவராக பொறுப்பு அளிக்கப்பட்டது.

விரைவில் நடைபெற உள்ள தமிழ சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மதவாத போராளிகளாலும், மாவோயிஸ்டுகளாலும் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Image result for பாஜக அண்ணாமலை

மாவட்ட காவலர்கள் மற்றும் புலனாய் பிரிவு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரின் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அண்ணாமலை, தனக்கு ஆபத்து உள்ளது என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் தான் எந்த மதத்தை எதிர்த்து பேசியது இல்லை என்றும், எல்லோருடன் இணைந்தே பணிபுரிய விரும்புவதாக கூறியுள்ளார்.

இநத் அண்ணாமலை தங்கியுள்ள குடியிருப்பு சுற்றி 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல அண்ணாமலை வெளியில் எங்கு சென்றாலும் இரண்டு போலீசார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என மாநில பாதுகாப்பு பரிசீலனை குழு தெரிவித்துள்ளது.

Views: - 22

0

0