பழனி முருகன் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை : குடும்பத்துடன் சாமி தரிசனம்!!

12 July 2021, 9:43 am
Palani Murugan- Updatenews360
Quick Share

பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை ஐபிஎஸ் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை ஐ.பி.எஸ். இன்று பழனிக்கு வருகை தந்தார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனது மனைவி மற்றும்‌ குழந்தைகளுடன் வந்த அண்ணாமலைக்கு திண்டுக்கல் மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழனி மலை அடிவாரத்திலிருந்து வின்ச் மூலமாக மலைக்கு மேல் சென்ற அண்ணாமலை ராஜ அலங்காரத்தில் இருந்த முருகனை வழிபட்டார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலையுடன் பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Views: - 262

0

0