நேபாளத்தில் தமிழக சிறுவன் சாதனை: சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்..!!

Author: Aarthi Sivakumar
26 September 2021, 12:30 pm
Quick Share

தாம்பரம் : நேபாளம் நாட்டில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 19 வயது இளைஞர் ஆகிய இருவரும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டு பெக்ராவில் திறந்தவெளி சர்வதேச சிலம்பம் போட்டி நடந்தது. இதில், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த சிலம்பம் வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை காட்டுக் காலனியைச் சேர்ந்த சுரேஷ் மகன் தனுஷ்குமார் (வயது 13). திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த மாரி மகன் மணிகண்டன் (வயது 19) ஆகிய இருவர் பங்கேற்றனர்.

400 பேர் பங்கேற்ற போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சிறுவன் தனுஷ்குமார் தங்கம் வென்றார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மணிகண்டனும் தங்கம் வென்றார்.

சர்வதேச சிலம்பம் போட்டியில், தமிழகத்தில் இருந்து சென்று இருவரும் தங்கம் வென்று தமிழகத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இருவரும், ஏற்கனவே கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் படப்பையை சேர்ந்த இன்டெர்னல் போர்ஸ் மார்ஷலார்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் தலைமை பயிற்சியாளர் தமிழரசனை தங்கம் வென்ற மாணவர்களின் பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.

Views: - 168

0

0