தமிழக முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வருங்கால பிரதமர் : உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 3:19 pm
Udhayanithi - UPdatenews360
Quick Share

தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கலைஞர் திடலில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 700 பேருக்கு தையல் மிஷன்,400 நபருக்கு சலவை பெட்டி, 500 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், 61 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தமாக 2000 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கழக முன்னோடிகள் 300 பேருக்கு பொற்கிழியையும் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவில்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும், தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என கூறினார்.

Views: - 188

0

0