கோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayaraman
27 July 2021, 9:24 pm
Malaysia Corona - Updatenews360
Quick Share

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,767 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,52,047ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,966 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 22,188 ஆக உள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 23 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய இறப்புகளுடன் சேர்த்து இதுவரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,966-ஐ எட்டியுள்ளது. தமிழகத்தில் இன்று 2,312 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,95,895 ஆக உயர்ந்துள்ளது. இன்று மொத்தமாக 1,43,310 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,767 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 135

0

0