”ஜெ., மரணத்திற்கு இவங்க தான் காரணம்” : தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!!

1 February 2021, 3:39 pm
Jayalalitha Pollachi Jayaraman - Updatenews360
Quick Share

திருப்பூர் : வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி.V.ஜெயராமன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

இதையடுத்து ஊட்டச்சத்து பெட்டகத்தை கற்பினி பெண்களுக்கு வழங்கினார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மீது பொய்யான ஊழல் வழக்குகளை தொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார்.

திமுகவினரால் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைய காரணம் என்று கூறினார். இன்று அதிமுக இமயம் போல உயர்ந்து நிற்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. திமுகவிற்கு இதுவே இறுதி தேர்தல் என  தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், சுகாதார துணை இயக்குனர், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 30

0

0