வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த நாராயணபுரம் பகுதியில் சேர்ந்தவர் குமாரசாமி (65), இவரது மகள் கலாவதி (32) ஜம்மு காஷ்மீரில் CRPF காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 24.07.2025 அன்று நாராயணபுரத்தில் வசித்து வந்த குமாரசாமி அன்று அதிகாலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்று விட்டு மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து குமாரசாமி பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் CRPF ல் பணியாற்றி வரும் காவலர் கலாவதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டில் எங்கள் அப்பா விவசாய நிலத்திற்கு சென்ற போது யாரோ வீட்டை உடைத்து எனது திருமணத்திற்காக வைத்திருந்த 22 சவரன் நகைகள், பட்டு புடவை, மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அப்போது யாரும் இல்லை எனக் கூறி விட்டார்கள் தாமதமாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்தார்கள். ஆனால் இதுவரை நகையை கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை.
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது திருமணத்திற்காக வாங்கி வைத்த நகைகள் போய்விட்டது எனக்கு யாருமே உதவவில்லை என சீருடையில் அழுதபடி வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் கேட்டபோது, அவர்கள் புகார் அளித்த மறுநாளே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது,
கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்துள்ளார்கள். புகார்தாரர் மற்றும் பெண் காவலர் யார் யார் மீது சந்தேகம் இருக்கிறது என கூறினாரோ அவர்கள் அனைவரிடத்திலும் விசாரணை செய்துள்ளோம்
தற்போது வரை 80 சதவிகிதம் அளவுக்கான விசாரணை முடிந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் விரைவில் காணாமல் போன நகை மீட்கப்படும் இந்தச் சூழலில் அவர் எதற்காக வீடியோ வெளியிட்டார் என தெரியவில்லை என கூறினர்.
வீடியோவில் அழும் பெண் CRPF காவலருக்கு பொன்னையை சேர்ந்த சத்யா என்ற ராணுவ வீரருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் 6 மாதத்திலேயே பிரிந்துள்ளனர்.
இவர் தான் நகையை எடுத்து இருப்பார் என பெண் காவலர் கூறியதை தொடர்ந்து அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதனிடையே பெண் கதறி அழுத வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் மரியாதையுடன் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிஆர்பிஎஃப் ஜவான், இந்த ஆண்டு ஜூன் மாதம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் காவல்துறையின் நடவடிக்கையின்மை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
சீருடையில் இருக்கும் ஒரு பெண்ணை தோளில் தேசக் கொடியை ஏந்தியபடி ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது?
இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் திமுகவின் ஆட்சி மாதிரி, நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள். எழுந்திருங்கள் திரு. மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.