தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை மீனவர்கள் அட்டூழியம்..!

5 September 2020, 9:45 am
Quick Share

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கொடியக்கரைக்கு தென்கிழ பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் சிலர் தமிழக மீனவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், தமிழக மீனவர்களான கோபி, வேலவன், சுகுமாரன், காளிதாஸ் ஆகியோருக்கு உடல் மற்றும் தலையில் ஆளமான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள், காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் காவல் படையினரும், மீனவர்களும் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டே போவதாக புகார் அளித்துள்ள மீனவர்கள், இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0