“நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசுத் தயார்“ : அமைச்சர் ஜெயக்குமார்

23 November 2020, 12:08 pm
Minister Jayakumar - Updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயலை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கவிஞர் சுரதாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நிவர் புயலை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், புயலை எதிர்க்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறினார். மேலும் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

அமித்ஷா அரசு முறைப்பயணமாகவே தமிழகம் வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கஃ

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கொரோனா காலத்தில் மேற்கொண்டுள்ள பயணம் மக்களுக்கு எதிரானது என்றும், இதன் காரணமாக கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இரு கட்சிகள் சார்பாக தொகுதிப் பங்கீடு குறித்து ஆசோதித்து முடிவெடுக்கடுப்படும் என கூறினார்.

Views: - 17

0

0