மீனவர்களின் உரிமைகளை பறிப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!

18 July 2021, 5:49 pm
Anitha Radhakrishnan- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சாகர்மாலா திட்டத்தின் மூலம் மத்திய அரசு தமிழக மீனவர்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை தடுக்க அரசு சட்டங்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்தார். இதனையடுத்து மீனவர்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ” கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் தளம் அமைக்க 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குரிய பணிகள் துவங்கப்பட உள்ளது.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதனை தடுக்க தமிழக முதல்வர் உரிய சட்டங்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க உள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க மாவட்டந்தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

Views: - 165

0

0