‘நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு’ – மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள்..!

29 August 2020, 4:10 pm
Quick Share

5-வது ஞாயிற்றுக்கிழமையான நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு 7 ஆம் கட்டமாக ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்தின் 5-வது ஞாயிற்றுக்கிழமையான நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை மளிகை, இறைச்சி கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளும், பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்.

பால் விநியோகத்துக்கு அனுமதி உள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயங்க அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரங்களுக்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0