பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய புதிய வாட்ஸ்அப் சேனல்! அசத்தும் தமிழக அரசு

27 February 2021, 9:47 am
Tamil Nadu govt launches WhatsApp channel to address public grievances
Quick Share

தமிழக அரசின் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) ஆனது பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் சேனல் ஒன்றை 26 பிப்ரவரி 2021 வெள்ளிக்கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளது. குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர, GCC மற்றும் பொதுமக்களிடையே பயனுள்ள தகவல்தொடர்புக்கான வசதியாகவும் இந்த வாட்ஸ்அப் சேனல் பயன்படுத்தப்படும்.

வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் முறையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் நகராட்சி அமைப்பு GCC தான் என்றும் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான தானியங்கி குறைகளை பதிவு செய்யும் முறை குடிமக்களுக்கு பதிவு செய்யப்பட்ட குறைகளின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும்.

முக்கியமான அறிவிப்புகள், புதுப்பிப்புகள், குறிப்பிட்ட கால நிகழ்வுகள், ஹெல்ப்லைன்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களுக்கும் இது வழி வகுக்கும். சரியான  நேரத்தில், பயனாளிகளுக்கான தடுப்பூசி வெளியீட்டு முறைகள் குறித்த முக்கியமான தகவல்களும் இந்த சேனல் வழியாக வழங்கப்படும்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குதல், சரியான நேரத்தில் வரி செலுத்துதல் குறித்த நினைவூட்டல்கள் மற்றும் குடிமக்களுக்கு தேர்தல் சேவைகள் போன்ற குடிமக்களை மையமாகக் கொண்ட கூடுதல் சேவைகளை வழங்க இந்த வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் முறை உதவியாக இருக்கும் என்று என்று GCC தெரிவித்துள்ளது.

இந்த சேனலைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இந்த சேவையை பயனர்கள் பெற செய்ய வேண்டியது யாதெனில் GCC யின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என்று மெசேஜ் அனுப்புவதுதான். GCC யின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கின் தொலைபேசி எண் +91-94999 33644. பயனர்கள் மெசேஜ் செய்தவுடன், குறைகளைத் தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை எளிதில் பெறவும் முடியும்.

புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் சிஸ்டம் தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Views: - 45

1

0