தமிழகம் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு: 14 நாட்கள் குவாரன்டைன் கட்டாயம்…சுகாதாரத்துறை கெடுபிடி..!!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 12:42 pm
Quick Share

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து ஓரளவு மீண்டு விட்டதாக மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் மிகக் கொடூரமானது எனவும், அதிவேகத்தில் பரவக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் மத்திய அரசும், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறையும் ஒமிக்ரானுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளது.

மேலும், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்பட 14 நாட்கள் காண்காணிப்பில் இருக்க வேணடும் என உத்தரவிட்டுள்ளது.

Views: - 233

0

0