தமிழக இடைக்கால பட்ஜெட் : தொழிற்சங்கங்கள் வரவேற்பு.!

23 February 2021, 5:26 pm
Codissia Cotma 1 - Updatenews360
Quick Share

கோவை : தமிழக இடைக்கால பட்ஜெட்டில் உள்ள பல்வேறு அறிவிப்புகளை கொடிசியா மற்றும் காட்மா தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

தமிழக இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை வரவேற்று கொடிசியா மற்றும் காட்மா சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6283 கோடி ரூபாய் ஒதுக்கீடு, மின்சாரத் துறைக்கு 7217 கோடி ரூபாய் ஒதுக்கீடு, வேளாண் துறைக்கு 11 ஆயிரத்து 982 கோடி ரூபாய் ஒதுக்கீடு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்தும் விதமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2350 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 2000 மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள் உட்பட 12,000 புதிய பேருந்துகள் வாங்க திட்டம், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் வழித்தட திட்டத்திற்கு 1458 கோடி ரூபாய் ஒதுக்கீடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு, இரண்டாம் கட்ட சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு 5121 கோடி ரூபாயை ஒதுக்கீடு, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் கற்பிக்கப்படும் உள்ள திட்டங்களை வரவேற்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Views: - 7

0

0