வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு : நீதிமன்றதில் குடும்பத்துடன் ஆஜராகிய தமிழக அமைச்சர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2021, 6:45 pm
Minister Aajar -Updatenews360
Quick Share

விருதுநகர் : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆஜராகினர்.

கடந்த 2006 முதல் 2010 வரை திமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்த கே.கே.எஸ்எ.ஸ்.ஆர் ராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சர் உதவியாளர் செண்பகமூர்த்தி மற்றும் தங்கம் தென்னரசு அவரது மனைவி மணிமேகலை ஆகிய 5 பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வைத்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது மனைவி மணிமேகலை ஆகிய 5 பேரும் வழக்கு விசாரணைக்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வரும் செம்படம்பர் மாதம் 15 ஆம் தேதி மீண்டும் 5 பேரையும் ஆஜாரகும் படி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 342

0

0