தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து டெல்லி விசிட் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை பயணம்!!

6 July 2021, 12:54 pm
Minister Subramanian Delhi- Updatenews360
Quick Share

சென்னை : தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசி தற்போது கையிருப்பு இல்லை என்றும் நாளை டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் தமிழகத்திற்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் படி கோரிக்கை வைப்பதகாக கூறினார்.

அதன்படி தமிழகத்தில் தேவையான கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்க கோரிக்கை வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

Views: - 100

0

0