8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!

9 September 2020, 12:51 pm
Quick Share

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

Views: - 0

0

0