தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..!

27 August 2020, 1:19 pm
Quick Share

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம்,

மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0