தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!!
Author: kavin kumar28 August 2021, 9:28 pm
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1 ஆயிரத்து 551 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 872 பேர் ஆண்கள், 679 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 10 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 182 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 12 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 1 ஆயிரத்து 768 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 57 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 17 ஆயிரத்து 559 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0
0