தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்யைன் பேட்டி

10 November 2020, 9:54 pm
Quick Share

ஈரோடு: தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்யைன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் மற்றும் வேட்டைகாரன்கோயில் ஆகிய இரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 400க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், 16, 300 பேர் நீட் தேர்வில் பயிரச்சி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு நேற்று முதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

7.5 இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள்கள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளிகளில் சீருடைகள் , காலணிகள் தயாராக உள்ளது. மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். தமிழகம் முழுவது 45 சதவிகிதம் பெற்றோர்கள் மட்டுமே கருத்து கேட்பு முகாமில் கலந்து கொண்டனர். பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது இது குறித்து நவ். 12 ம் தேதிக்குள் முதல்வர் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார். நீட் தேர்வு விலக்கு குறித்து வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Views: - 19

0

0