தமிழகத்தில் பள்ளிகள் திறப்பா..? அமைச்சர் செங்கோட்டையன் பதில்..!

5 September 2020, 12:54 pm
Quick Share

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது.

இந்த சூழலில், ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார். மேலும், தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 6

0

0