ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க…

20 January 2021, 1:58 pm
Tamil Nadu Startup and Innovation Policy 2018-2023
Quick Share

தமிழ்நாட்டில் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க பல்வேறு நல திட்டங்கள் மற்றும் சலுகைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது தமிழக அரசு தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் “புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023” (Tamil Nadu Startup and Innovation Policy 2018-2023) என்ற புதிய கொள்கையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருந்தது. 

தமிழக அரசு அறிமுகப்படுத்திய இந்த புதிய கொள்கையின் முக்கிய நோக்கம் புதிய தொழில்முனைவோருக்கு மானியம் வழங்குவதாகும். அதன் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் புதிய தொழில்முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

எனவே, புதிய தொழில்முனைவோர் இந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதிக்குள் TANSEED – Tamil Nadu Startup Seed Grant Fund என்ற வலைத்தளத்தை பார்வையிட்டு உங்கள் தொழில் விவரங்களை உள்ளிட்டு அதில் கேட்கப்பட்டும் கேள்விகளுக்குப் பதிலளித்து ரூ.10 லட்சம் மானியமாக பெற்றுக்கொள்ளலாம்.

Views: - 0

0

0