உக்ரைனில் உயிரை கையில் பிடித்து தவிக்கும் தமிழக மாணவர்கள் : மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்து உருக்கம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 2:34 pm
TN Students in Ukraine - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி உக்ரைன் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவ படிப்பு பயின்று வருகிறார்.
இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.

ரஷ்யா நாட்டின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் எமர்ஜென்சி நிலவி வருவதால் அங்கு வாழும் தமிழக மாணவர்களை பதுங்கு குழி போல் உள்ள கீழ்தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது கையிருப்பில் குறைந்த அளவு உணவுகள் மட்டுமே கையில் இருப்பதாகவும், உணவு தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் கூறுகின்றனர். உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே மேல் தளத்தில் சென்று உணவு அருந்தி விட்டு மீண்டும் கீழ் தளத்திற்க்கு சென்று விடுகின்றனர்.

அப்பகுதியில் இணையதள சேவை முழுவதுமாக முடங்கி உள்ளதாகவும், போக்குவரத்து சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் வாழும் தமிழக மாணவர்கள் கூறுகின்றனர்.

மேலும் எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருவதாகவும் வேதனைப்படுகின்றனர். மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உக்ரைன் நாட்டில் இருந்து எங்களை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Views: - 305

0

0