‘தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு’ சில இடங்களில் கனமழை…!

11 August 2020, 8:59 am
Quick Share

வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 10

0

0