7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

7 September 2020, 12:51 pm
Quick Share

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதேபோல், அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Views: - 0

0

0