11 மாட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..!

2 September 2020, 4:24 pm
Quick Share

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, சிவகங்கையில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காரணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :-

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கொடி வரை இன்று இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 5

0

0