நடுரோட்டில் டிப்பர் லாரியை வழிமறித்து ஹீரோயிஷம் காட்டிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் : போலீசார் விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2021, 7:14 pm
Natham Naam Tamilar -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நத்தம் அருகே வெள்ளைக் கற்கள் ஏற்றி வந்த லாரிடிய சிறைபிடித்த நாம் தமிழர் கட்சிப் பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி சாலையில் உள்ள தேத்தாம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளைக் கல் குவாரி உள்ளது. இந்த நிலையில் அந்தக் குவாரிக்கு சொந்தமான டிப்பர் லாரி ஒன்று வெள்ளைக் கற்களை ஏற்றிக்கொண்டு நத்தம் நோக்கி வந்தது.

அப்போது லாரியை வழி மறித்து உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக கூறி நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் தனது காரை கொண்டு டிப்பர் லாரி மறித்து சிறை பிடித்ததால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த நத்தம் காவல் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் காவல்துறையினர் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சிவசங்கரன் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 389

0

0