விஜய் களத்தில் இறங்கி, மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சிதான் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு: தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தரராஜன், இன்று செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜய் கட்சி தொடங்கி இன்று ஓராண்டு நிறைவடைவது குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், “நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிறதா? அவர் Invisible-ஆக இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றால், Visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது எனத் தெரியவில்லை. அவர் திரையில் Visible ஆகவே இருக்கிறார், அவரது ரசிகர்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது.
ஆனால், அவர் களத்துக்கு இறங்கி, மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சிதான். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. அது போன்று, விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும், Work From Home மற்றும் இணையத்தில்தான் பணி செய்ய வேண்டும், களத்தில் இறங்க வேண்டாம் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.
எங்களைப் போன்ற தலைவர்கள், மக்களோடு மக்களாக பழகுகின்ற தலைவர்களே சரியான தலைவர்கள் என நாங்கள் நினைக்கிறோம. அதனை விஜய் முடிவு செய்யட்டும். அவர் பனையூரில் இருந்து வெளியேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொள்கையில் முரண்பாடு.. இதைத்தான் செய்ய வேண்டும்.. விஜய்க்கு சரத்குமார் அட்வைஸ்!
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சியை ஆரம்பித்த விஜய், அக்டோபரில் தான் கொள்கைகளை அறிவித்தார். இதற்கு அடுத்தும், அவர் வெளியில் களத்திற்கு வரவில்லை. குறிப்பாக, சென்னை மழைவெள்ளத்தின்போதுகூட தனது அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், சமீபத்தில் பரந்தூருக்கு வந்து மக்களிடையே, விமான நிலையத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.