தமிழகத்தில் இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : 7 மாவட்டங்களில் சுமாரான மழை நீடிக்க வாய்ப்பு..!!

Author: Babu
15 October 2020, 1:08 pm
rainy-updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக காலநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், உள்கர்நாடகத்தின் வான்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரையில் நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 32

0

0