தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பு
12 September 2020, 12:17 pmQuick Share
சென்னை : தமிழகத்தில் செயல்பட்டு வரும் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 58 கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல, பல்கலை., இணைப்பு குறித்து எந்தவித அனுமதியும் பெறாத 13 கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, குறிப்பிட்டுள்ள 71 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், அதற்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: - 0
0
0