திமுக – விசிக இடையிலான தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு : நாகை, திருப்போரூர் ஆகிய பொது தொகுதிகளும் ஒதுக்கீடு..!!

Author: Babu Lakshmanan
11 March 2021, 8:16 pm
Thirumavalavan- updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக இரு கட்சியினரும் நடத்திய தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

விசிக போட்டியிடும் 6 தொகுதிகள்

காட்டுமன்னார் கோவில் (தனி)

அரக்கோணம் (தனி)

செய்யூர் (தனி)

வானூர் (தனி)

நாகப்பட்டினம்

திருப்போரூர்

Views: - 67

0

0