வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல்முறையாக ஆன்லைன் பயிற்சி : தேர்தல் அதிகாரி

19 April 2021, 1:34 pm
Satyabrata Sahoo - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல்முறையாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இன்று மதியம் 3 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறது. காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்கிறார்.

14 மேஜைகள் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஆனால், பெரிய தொகுதிகளுக்கு 30 மேஜைகள் வரை கொண்டு வாக்கு எண்ணிக்கை இருக்கும். 2ம் தேதி அன்று காலை 8.30 மணிக்கு தபால் வாக்கு முதலில் தொடங்கும். அதே போல் அதே நேரத்தில் EVMல் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக பத்திரமாக காவல்துறை பாதுகாப்புடன் இருக்கிறது. அதில் எந்த தவறும் இதுவரை இல்லை. அப்படி ஏதேனும் புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு, முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் கொடுக்கப்படும். 234 பொது பார்வையாளர்கள் 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பார்கள். இதே போல கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர் ஈடுபடுவார். 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்கெண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல்முறையாக ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.

EVM இயந்திரங்களை Hack செய்ய முடியாது. அது ஒரு calculator போல தான். அதுபோல வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகில் கண்டெய்னர் வந்தது தொடர்பான விசாரணையில், அது பள்ளிகளுக்கான கழிப்பறை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது, தவிர அதில் வேறு எந்த ஓரு செயல்பாடும் நடைபெறவில்லை, எனக் கூறினார்.

Views: - 41

0

0