இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சட்டப்பேரவை ஒத்திவைப்பு : மீண்டும் 25ம் தேதி கூடும் என அறிவிப்பு

23 February 2021, 3:14 pm
Today Last Assembly- updatenews360
Quick Share

சென்னை : இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பேரவை ஒரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், 2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் தாக்கல் செய்யப்பட்டது. 11வது முறையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு பேச வாய்ப்பு கேட்டு எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை மீண்டும் 25ம் தேதி கூடும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்.,26ம் தேதி 2ம் நாளாக இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடக்கும் என்றும், பிப்.,27ம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலுரை நடத்தப்படும் என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0

Leave a Reply