78 வது சுதந்திர திருநாள்: கொடியேற்றி விருதுகளை வழங்கினார் முதல்வர் மு க ஸ்டாலின்: தலைசால் தமிழர் விருது பெற்ற குமரி அனந்தன்…!!

Author: Sudha
15 August 2024, 10:41 am
Quick Share

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் உரையாற்றினார்.

முன்னதாக, சுதந்திர தினவிழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சியும் கோட்டை கொத்தளத்தில் நடத்தி பார்க்கப்பட்டது. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பஸ்நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் விருது சந்திரயான் 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேலு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கு வழங்கப்பட்டது.

இதேபோல் முதலமைச்சரின் நல்ஆளுமை விருது,மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு மற்றும் மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனமாக தூத்துக்குடியை சேர்ந்த சந்தானம் பேக்கேஜிங், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி போன்றவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, சமூகநலத்துக்கான மற்றும். சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளை கோவை மாநகராட்சி, திருவாரூர் நகராட்சி, சூலூர் (கோவை) பேரூராட்சி, சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலமாக 14-வது மண்டலம் ஆகியன தட்டிச் சென்றன.

  • Eps அரசியல் நாகரீகமே இல்லையா? அதிகார மமதையில் அராஜகம் : கேபி முனுசாமியை தடுத்த திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
  • Views: - 183

    0

    0