நல்லாட்சி தொடர தொழில்துறையினர் நேசக்கரம் நீட்ட வேண்டும் – முதலமைச்சர் பேச்சு

23 January 2021, 8:25 am
Quick Share

கோவை: தொழில்துறையினரி கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று கோவையை சேர்ந்த தொழிற்துறைனருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பிரச்சார பயணமாக கோவை வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் முதலமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது முதலமைச்சர் பேசுகையில், தொழில் அமைப்புகளின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும் என்றும் தொழில் துறையினருக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், கோவையில் எங்கெல்லாம் மேம்பாலங்கள் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் பாலங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தடையின்றி குடிநீர் வழங்க கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகற்றில் நல்லாட்சி தொடர தொழில் துறையினர் நேசக்கரம் நீட்ட வேண்டும் என்றார்.

Views: - 4

0

0