தமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா : 7 மாவட்டங்களில் ஒற்றை இலக்கு எண்ணிக்கையில் சிகிச்சை பெறுபவர்கள்..!!

6 March 2021, 6:57 pm
Corona_test_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500ஐ கடந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது

படிப்படியாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 500க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்று 562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,54,554 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,517 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 562 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 38 ஆயிரத்து 085ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 55,051 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 3,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 1

0

0